யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட இரத்த தானம் முகாம்!

தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் இரத்ததான முகாம் அமைக்கப்பட்டு இரத்த தானம் வழங்கப்பட்டு வருகின்றது.

குறித்த நிகழ்வு இன்று காலை ஆரம்பமானதுடன் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்து வருவதை அவதானிக்க முடிகிறது.

மேலும், இன்று குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடக்கிறது. ஓவியப் போட்டியில் தியாகி தீபம் திலீபனின் உருவப்படங்களை குழந்தைகள் வரைந்து வருகின்றனர்.

Previous articleஜனாதிபதி தெரிவு செய்தலில் தவறான மக்களின் முடிவே இந்நிலைக்கு காரணம்! கருணா வெளியிட்ட தகவல்!
Next articleவனப்பகுதிக்கு தீ வைத்த மாணவர்கள் கைது!