நாட்டில் மீண்டும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு ?

இலங்கையில் உணவு விலை பணவீக்கம் 84 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியே இந்த நிலைமைக்குக் காரணம்.

இந்த புதிய வரி காரணமாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் அனைத்து நுகர்வுப் பொருட்களின் விலைகள் மீண்டும் உயரும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரி மீதான வரி (இரட்டை வரிவிதிப்பு) முறையின் கீழ் இந்த வரி செயல்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, தற்போது விதிக்கப்படும் வரி 15 சதவீதம் மற்றும் மொத்த சமூக பாதுகாப்பு வரி 2.5 சதவீதம் விதிக்கப்படும்.

இது வேறு பெயரில் முந்தைய தேசத்தை கட்டியெழுப்பும் வரியாக பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

தொழிலதிபர்கள் முன்பு செய்தது போல், இந்த மறைமுக வரி முழுவதுமாக நுகர்வோர் மீது சுமத்தப்பட்டு, அதிக சுமை உள்ள மக்கள் மேலும் நெருக்கடிக்கு தள்ளப்படுவார்கள்.