யாழில் மதுபான விலையேற்றத்தால் அதற்கு பதிலாக ஓடிகுளோனை குடித்த நபர் பலி!

மதுபானங்களின் விலை அதிகரிப்பால் அதற்கு பதிலாக ஒடிகலோனை குடித்து 54 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (25) யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் ரயில் நிலைய வீதியைச் சேர்ந்த மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தனது மனைவியைப் பிரிந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டுமன்றி, மதுபான போத்தல்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர், பணம் கொடுக்க முடியாமல் தொடர்ந்து ஓடிகோலோன் குடித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்குள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்தனர்.

Previous articleபிறந்தநாளில் நண்பர்களுடன் சென்ற பாடசாலை மாணவர் கடலில் மூழ்கி பலி!
Next articleகாதலனது பிறந்த நாளை கொண்டாட வீட்டில் இருந்து 20,000 திருடிய பாடசாலை மாணவி!