யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்!

யாழில் கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துச்சம்பவமானது ஊரெழு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சுன்னாகம் பகுதியை சேர்ந்த கோணேஸ்வரன் ஹரிபிரணவன் (வயது 29) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் என விசாரணையின் மூலம் தெரியவந்தள்ளது.

விபத்துக்குள்ளானவர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் , கடந்த மூன்று மாத கால பகுதியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Previous articleயாழ் பிரபல மகளீர் கல்லுாரி மாணவி கஞ்சா அடிப்பவனுடன் பஸ்சுக்குள் காதல் லீலை!!
Next articleபிரபல தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் 16 பேர் அதிரடியாக கைது : வெளியானன காரணம்!