யாழில் போதைப்பொருளுடன் கைதான பல்கலைகழக மாணவன்!

யாழில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் மாணவர் ஒருவர் வீட்டில்
பொதைப்பொருள் பாவித்து வருவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலறிந்த பொலிஸார் சம்பவஇடத்தினை சுற்றிவழைத்து இளைஞனை கைது செய்துள்ளார்.

மேலும் வீட்டினை சோதனையிட்டபோது 750 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleயாழில் பாடசாலை மாணவர்களுக்காகவும் சமூகத்திற்க்காகவும் களமிறங்கிய கல்வி அமைச்சின் செயலாளர்!
Next articleவகுப்பு செல்வதாக கூறி ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றும் மாணவிகள்!