வகுப்பு செல்வதாக கூறி ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றும் மாணவிகள்!

கிழக்கு மாகாணம் திருக்கோவில் வைத்தியசாலைக்கு அருகில் விசேட வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகள் சிலர் வகுப்புகளுக்குச் செல்லாமல் பெற்றோரை ஏமாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு ரியூசன் வகுப்பிற்கு செல்லும் மாணவிகள் சிலர் வகுப்புகளுக்கு செல்லாமல் ஆண் நண்பர்களுடன் வெளியே செல்வதாகவும் இது தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கூடுதல் வகுப்புகளுக்கு வரும் மாணவிகள், பஸ்சில் செல்லாமல் பைக்கில் இளைஞர்களுடன் வகுப்புகளுக்கு செல்கின்றனர்.

இருப்பினும், வகுப்புகள் முடிந்ததும் சக மாணவர்களுடன் பேருந்து நிறுத்தத்தை அடைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் பேருந்து மற்றும் கூடுதல் வகுப்புகளுக்கு பணம் கொடுத்து சிரமத்திற்கு மத்தியில் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் இதில் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleயாழில் போதைப்பொருளுடன் கைதான பல்கலைகழக மாணவன்!
Next articleமாணவி ஒருவரை துடைப்பத்தால் தாக்கிய பாடசாலை அதிபர்க்கு ஏற்பட்ட நிலை!