சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் கரையொதிங்கிய பெண் ஒருவரின் சடலம்!

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடற்கரை பகுதியில் இன்று காலை மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலம் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து குறித்த பெண் காரைதீவு பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஆறுமுகம் வனிதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிரியர் என்பதுடன், இது தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகடவுள் சொன்னதாக கூறி ஆறு வயது சிறுவனை நரபலி கொடுத்த இளைஞர்கள்!
Next article10 ஆயிரம் பாடசாலைகளை மூடவேண்டிய நிலை வரும் : வெளியான விபரம்!