யாழில் ஆட்டோ சாரதி மீது சரமாரி வாள்வெட்டு : வெளியான காரணம்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி ஒருவரை வாள்வெட்டு கும்பல் தாக்கியதுடன், படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த எஸ். ரதீஷ்குமார் (வயது 41) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வியாழக்கிழமை (06) இரவு கொக்குவில் பகுதியில் இருந்து அச்சுவேலியில் உள்ள தனது வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 06 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் அவரை வழிமறித்து வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள 15 வயது பாடசாலை மாணவி!
Next articleகாலிமுகத்திடல் கடற்கரையில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் பின்னர் நடந்த சோகம்!