கல்வியிலும் விளையாட்டிலும் சாதனை படைத்த முல்லைத்தீவு வீர வீராங்கனைகள்!

முல்லைத்தீவு மாவட்ட பெண் வீராங்கனைகள் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை படைத்துள்ளனர்.

இவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (05.10.2022) பிற்பகல் 3.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலக ஆரியத்தி மண்டபத்தில் மாவட்ட விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.விமலநாதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வீரமிக்க பெண்களை கௌரவித்தார்.

மாகாண, பல்கலைக்கழக, தேசிய அளவிலான உடற்தகுதி போட்டி, உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, வுஷூ போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 11 பெண் வீராங்கனைகள் கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் சிறந்த சாதனையாக பார்க்கப்படுகிறது. பல்கலைகழகத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மருத்துவத்துறை, தொழில் நுட்பத்துறை, கலைத்துறை, வணிகத்துறை, விளையாட்டு அறிவியல் துறை போன்றவற்றில் தேர்வு செய்து கல்வி கற்று, இன்னும் சிலர் படித்து வருகின்றனர்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) திரு.கே.கனகேஸ்வரன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) திரு.எஸ்.குணபாலன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.கே.வில்வராஜா, மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவிப் பணிப்பாளர் திரு.லிங்கேஸ்வரகுமார், காணி பயன்பாட்டுத் திட்டமிடல் பிரிவு உதவிப் பணிப்பாளர் திரு கு. முரளிதரன், கோட்டப் பொறியாளர் திரு.சி.கஜந்த், மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ஜெயபவானி, மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.ந.முகுந்தன், மாவட்டப் பயிற்றுவிப்பாளர் திரு.இ.சகிதரசீலன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.