பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்!

இலங்கையில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு நாளை விசேட விடுமுறை வழங்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அத்துடன், கொழும்பு பங்குச் சந்தையில் நாளை வர்த்தகம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.