இன்றைய மின்வெட்டு நேரம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தினமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று (16-10-2022) 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மற்றும் ஒக்டோபர் 17 ஆம் திகதி 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இதன்படி வார இறுதி நாட்களில் 1 மணிநேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அதேவேளை திங்கட்கிழமைகளில் கீழ்க்கண்டவாறு 2 மணிநேரம் 20 நிமிடங்களாக நீடிக்கப்படும்.

அக்டோபர் 15 & 16 – குழுக்கள் ABCDEFGHIJKLPQRSTUVW – 1 மணிநேரம் 20 நிமிட மின்வெட்டு ஒரே இரவில் அமல்படுத்தப்படும்.