சற்றுமுன் பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை : சோகத்தில் வாடும் திரையுலகம் !

வைசாலி தக்கர் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானவர். அவரது தொலைக்காட்சித் தொடர்களான “யே ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை” மற்றும் “`சசுரல் சிமர் கா” போன்றவை மிகவும் பிரபலமடைந்தன.

அவர் கடைசியாக ரக்ஷாபந்தனில் நடித்தார். கடந்த ஒரு வருடமாக மும்பையை காலி செய்துவிட்டு இந்தூரில் தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். இவர் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாகியும் படுக்கையறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த வைசாலியின் தந்தை, கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் வைசாலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து தற்கொலை அறையை சோதனையிட்டதில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில், தற்கொலைக்கான காரணத்தை வைசாலி குறிப்பிட்டுள்ளார். அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைசாலிக்கு கென்யாவைச் சேர்ந்த டாக்டர் அபிநந்தன் சிங்குடன் கடந்த ஆண்டுதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டார்.

ஆனால் கொரோனா வைரஸைக் காரணம் காட்டி, மக்கள் இறக்கும் போது நாங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று கூறி ஒரு மாதத்திற்குள் திருமணத்தை நிறுத்தினார். தற்போது அவரது திடீர் தற்கொலை இந்தி தொலைக்காட்சி நட்சத்திரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வைசாலி கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வைசாலி சமூக வலைதளங்களில் நிறைய வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்குடன் வைசாலி நெருங்கிய நண்பர்.

தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் காதல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டுள்ளார். முன்னாள் காதலனின் சித்ரவதையால் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும் என இந்தூர் காவல் உதவி ஆணையர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Previous articleமட்டக்களப்பில் பிரமாண்டமாக இடம்பெற்ற அருந்ததியின் “மாற்று மோதிரம்” நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும்!!
Next articleவவுனியாவில் மயிரழையில் தப்பிய ஊழியர் : எச்சரிக்கை செய்தி!