யாழில் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!

யாழ்ப்பாணம் செல்வபுரம் பகுதியில் உள்ள வீட்டின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 15 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் வீடொன்றில் மதுபானம் காய்ச்சப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டை சோதனையிட்ட போது 34 வயதுடைய நபர் ஒருவர் வீட்டின் சமையலறையில் மதுபானம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்பின், அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்து 15 லிட்டர் கசிப்பை மீட்டனர். மேலும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை காவல்நிலையத்திற்கு ஆதாரமாக போலீசார் கொண்டு சென்றனர்.

Previous articleயாழில் மீன்களின் விலையில் திடீரென வீழ்ச்சி!
Next articleஆட்டோ மீது டிப்பர் மோதி கோர விபத்து! தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே பலி !