யாழில் கிலோகணக்கில் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா!

யாழில் 60 கிலோகணக்கில் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம்-மாதகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி, நேற்று அதிகாலை 2 மணியளவில் மாதாகல் கடற்கரையில் மேற்படி கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கேரள கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் படகும் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.