யாழில் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு !

யாழில் அடயாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதிங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ். இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளவாலை – சேந்தான்குளம் கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.

கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்த பொதுமக்கள் இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர் – இளவாலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதற்கிடையில் கடல் அலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

இதன் பின்னர் நீதிபதி முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த வருட இறுதியில் யாழ்.மாவட்டத்தின் கரையோரத்தில் இவ்வாறான சடலங்கள் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

Previous articleவவுனியாவில் திடீரென களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர்!
Next articleஇன்றைய ராசிபலன் 29/10/2022