யாழில் வட்டிக்கு மேல் வட்டி வாங்கிய வர்த்தகரின் விபரீத முடிவு !

யாழில் கடன் தொல்லை அதிகரித்ததால் வர்த்தகர் ஒருவர் தனது உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் அழகுசாதன கடை வைத்து நடத்தி வரும் வர்த்தகர் ஒருவர் வட்டிக்கு பணம் வேண்டியுள்ளார்.

இதனையடுத்து அதை அடைக்க வேறொரு இடத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

இவ்வாறு வாங்கியதால் வட்டிமேல் வட்டி ஏறியதையடுத்து குறித்த நபர் நேற்று அதிகாலை மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வர்த்தகரின் உயிரிழந்தமை தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

Previous articleதமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்க உள்ள இலங்கை பெண்ணான ஜனனி!
Next articleமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் உறுதி!