யாழில் அதிகரித்து வரும் நோய்; 2774 பேர் பாதிப்பு!

யாழில் இதுவரை 2,774 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு யாழ்.மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் கலாநிதி கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

டெங்கு நோய் பரவல் தொடர்பில் அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வருடத்தில் 8 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2020ல் 2,530 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 2021ல் 301 ஆக குறைந்துள்ளதாகவும், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

Previous articleவவுனியாவில் பாரிய பேரூந்து விபத்து – மூவர் உயிரிழப்பு – 16 பேர் படுகாயம்!
Next articleயாழில் புகையிரதத்தில் அடிபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு : வெளியான அதிர்ச்சித்தகவல்!