இந்தியாவின் கனவை தகர்த்தெறிந்த இங்கிலாந்து!

ரி20 உலகக் கோப்பையின் 2வது அரையிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அடிலெய்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. களம் இறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் விராட் கோலி 50 ரன்களும், ஹர்திக் பாண்டியா 63 ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சில் கிறிஸ் ஜர்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 170 ஓட்டங்களைப் பெற்று ரி20 உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன்படி பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 13ஆம் திகதி எம்சிஜி மைதானத்தில் நடைபெறவுள்ளது.