யாழில் பாடசாலை மாணவன் செய்த செயல் ; பொலிஸார் தேடல் !

நபர் ஒருவர் வீடொன்றை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

அந்த வீட்டின் கதவுகள் வாளால் வெட்டியும், கற்களை வீசியும் சேதப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடைக்காடு முள்ளியான் பகுதியில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த ஒரு வயதான தாய் மிகுந்த அச்சத்துடன் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.

இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கல்வியியல் கல்லூரி மாணவர் ஒருவர் வந்து வாள் காட்டி மிரட்டியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்: இரு சிறுமிகள் சடலமாக மீட்பு !
Next articleயாழில் 33வது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வு!