யாழ்ப்பாணத்தில் பேரணி; பெருமளவானோர் பங்கேற்பு !

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து யாழ்.மாவட்ட செயலகம் வரை இன்று விழிப்புணர்வு பேரணியொன்று நடத்தப்பட்டது.

யாழ். காலை 7.30 மணியளவில் போதான வைத்திய வீதிக்கு முன்பாக ஆரம்பித்த பேரணி யாழ் வைத்தியசாலை வீதி ஊடாக வேம்படி சந்தியை அடைந்து பிரதான வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், வைத்தியர்கள், தாதியர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் பேரணியில் கலந்துகொண்டனர்.

சர்வதேச நீரிழிவு தினம் நவம்பர் 14ஆம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், நீரிழிவு நோய் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ் போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இப்பேரணி இடம்பெற்றது.

Previous articleஇலங்கையில் சம்பளத்திற்கு பதிலாக ஹெரோயின் வழங்கிய முதலாளி !
Next articleயாழில் இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட சட்டவிரோதமான பொருளுடன் கைதான நபர்!