யாழில் மூவர் அதிரடி கைது : வெளியான காரணம்!

யாழ்ப்பாணம் நெல்லியடி வடமராட்சியில் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோப்ப நாயுடன் நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போதே இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சா மற்றும் 83 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரணவாய், தும்பளை, கொடவத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.