யாழில் சற்று முன் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி!

யாழில் சற்றுமுன் சொகுசு வானுடன் மோட்டார் சைக்கில் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியாகியள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது இன்று (17) இரவு யாழ் மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி எதிர்திசையில் வந்த சொகுசு வானுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.