யாழில் ஆசிரியர் தாக்கியதில் படுகாயமடந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

யாழில் ஆசிரியர் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.இந்துக்கல்லுாரியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பலத்த காயங்களுக்குள்ளான மாணவன் அப் பாடசாலையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவன் என தெரியவந்துள்ளது.

மாணவனை ஆசிரியர் தொடர்ந்து தடியடியால் தாக்கியதாகவும், தடி உடைந்த போது கையால் மாணவனின் நெற்றியில் அடித்ததாகவும் மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்.இந்துக்கல்லூரி அதிபரை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது, ​​சம்பவம் தொடர்பில் தனக்கு தெரியாது என தெரிவித்தார்.

இதுகுறித்து பரிசீலிப்பதாக அவர் கூறினார்.

Previous articleஓமானில் இலங்கைப் பெண்கள் விற்பனை; தூதரக அதிகாரியை தூக்கிய அரசாங்கம்!
Next articleஇங்கிலாந்தில் சாதனைப்படைத்த இலங்கை மாணவி!