யாழ். போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் இரு சடலங்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அடையாளம் தெரியாத நிலையில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சடலங்களையும் அடையாளம் காண உதவுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒக்டோபர் 28 ஆம் திகதி இளவாலை – திருவடி கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் யாழ் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இதேவேளை, யாழ்.பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு, பொலிஸாரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படவில்லை.

இரண்டு சடலங்களையும் அடையாளம் காண உதவி கோரப்பட்டுள்ளது.

Previous articleஇந்தியாவில் இலங்கை அகதி பெண் தூக்கிட்டு தற்கொலை : வெளியான காரணம்!
Next articleயாழ்.தெல்லிப்பளை மருத்துவமனையில் காணமல் போன அம்புலன்ஸ் மாகாண சுகாதார திணைக்கள பயன்பாட்டில்!