யாழில் நிறைபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து இளைஞன் பலி!

யாழில் அதிகளவான மதுவை எடுத்துகொண்டதால் நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது யாழ்.நவாலி – மூத்த விநாயகர் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது,

இவ்வாறு உயிரிழந்தவர் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது32) என்பவர் என தெரியவந்துள்ளது.

குடிபோதையில் இருந்த அவர் கிணற்றில் விழுந்துள்ளார், ஆனால் அப்பகுதி மக்கள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Previous articleபாடசாலையில் வாசனை திரவியம் பாவித்ததால் பாடசாலை மாணவிகள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!
Next articleவவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இடம்பெறும் மோசமான செயல்கள்! கண்டுகொள்ளாத பொலிஸ்