பாடசாலையில் வாசனை திரவியம் பாவித்ததால் பாடசாலை மாணவிகள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

திடீர் சுகவீனம் காரணமாக பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதவாச்சி யக்கவேவ கல்லூரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தரம் 07 இல் கல்வி கற்கும் 5 மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5 மாணவர்களும் காய்ச்சல், வாந்தி, தலைவலி, கடும் சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகுப்பில் பயிலும் மாணவி ஒருவர் கொண்டு வந்த வாசனை திரவிய பாட்டிலை தடவியதால் மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Previous articleயாழில் மாணவனை தாக்கிய ஆசிரியரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
Next articleயாழில் நிறைபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து இளைஞன் பலி!