யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர் : வெளியான காரணம்!

யாழில் போதைமாத்திரைகள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று யாழ்.தெல்லிப்பழை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பொலிஸார் நடத்திய விஷே் சுற்றிவழைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொாலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 19 மற்றும் 22 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் மல்லாகம் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்களிடம் இருந்து 19 போதைமாத்திரைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் ஆசிரியர் தாக்கப்பட விவகாரம்; வடமாகாண ஆளுநரின் அதிரடி பணிப்புரை!
Next articleயாழிலிருந்து மன்னாருக்கு கடத்தப்பட்ட 70 இலட்சம் பெறுமதியான கஞ்சா! 2 பேர் கைது..!