வியட்நாமில் உயிரிழந்த தமிழரின் உடலை கொண்டுவருவதில் நெருக்கடி! புலம்பெயர் தமிழர்கள் உதவ தயார்- சிறீதரன்!

வியட்நாமில் உயிரிழந்த சுந்தரலிங்கம் கிருதரனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு புலம்பெயர் அமைப்புக்கள் பணம் செலுத்த தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அண்மையில் படகு மூலம் கனடா செல்ல முயன்ற 303 இலங்கையர்கள் சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் இருவர் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது எனக் கூறி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றனர். இவர்களில் 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வர 30 லட்சம் ரூபாய் தேவை என அவரது மனைவி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, வெகுஜன ஊடக அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் அலிசாப்ரி, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரின் மனைவியுடன் வெளிவிவகார அமைச்சு கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நபரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு புலம்பெயர் அமைப்புக்கள் பணம் செலுத்த தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சருக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

Previous articleயாழில் இரவு வேளையில் இளைஞர்கள் மீது இராணுவம் – விசேட அதிரடிப்படையினர் தாக்குதல்!
Next articleயாழில் மகன் போதைப்பழக்கத்துக்கு அடிமையானதால் தற்கொலைக்கு முயன்ற தாய்!