யாழில் சற்றுமுன் பேருந்து மீது புகையிரதம் மோதி பயங்கர விபத்து ! சம்பவ இடத்தில் பலியான பேருந்து சாரதி!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் புகையிரத பாதையில் நுழைந்த பேருந்துடன் ரயில் மோதியதில் பஸ் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று (01) பிற்பகல் ஒரு மணியளவில் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் அப் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையால் அதிக விபத்துகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Previous articleதமிழர் உட்பட இருவரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவருக்கு நேர்ந்த நிலை!
Next articleயாழில் காற்று மாசுபாடு அதிகரிப்பு ! சுவாச நோயாளிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!