நாட்டில் பாரிய பின்னடைவை சந்தித்த மற்றுமொரு உற்பத்தி!

நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மொத்த தேயிலை உற்பத்தி 258.9 மில்லியன் கிலோகிராம் மற்றும் இந்த வருடத்தின் 10 மாதங்களில் மொத்த தேயிலை உற்பத்தி 211.1 மில்லியன் கிலோகிராம் ஆகும்.

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மொத்த இறப்பர் உற்பத்தி 66.3 மில்லியன் கிலோகிராம் எனவும், இந்த வருடத்தின் 10 மாதங்களில் மொத்த இறப்பர் உற்பத்தி 59.2 மில்லியன் கிலோகிராம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2021ஆம் ஆண்டு மொத்த தேங்காய் உற்பத்தி 2577.2 மில்லியனாக இருந்ததுடன், இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் தேங்காய் உற்பத்தி 2850 மில்லியன் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.