யாழில் மனைவியுடன் முரண்பட்டு குடியிருக்கும் வீட்டினை தீ வைத்து கொளுத்திய நபர் !

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் வாழ்ந்த வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம் அச்சுவேலி  பாரதி வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சண்டையிட்டு அவர்களை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டு வீட்டை பூட்டி விட்டு வீட்டின் ஜன்னல்களை அடித்து நொறுக்கியுள்ளார்.

அதன் பிறகு வீட்டிற்கு தீ வைத்தான். வீட்டில் தீ பரவியதையடுத்து, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தீயை அணைத்தபோதும் வீடு முழுவதும் எரிந்து நாசமானது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் குடும்பத்தினரை கைது செய்தனர்.

Previous articleமுல்லைத்தீவில் இளைஞர் மீது கொலைவெறித்தாக்குதல் ; காப்பற்றிய இராணுவம் !
Next articleயாழில் தொண்டமனாறு கரையோரத்தில் மீட்கப்பட்ட சடலம் ! பொலிஸார் தீவிர விசாரணை !