டெங்கு நோயில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்

இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே டெங்கு நோயில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.

டெங்கு என்றால் என்ன?

ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது.
உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர்
ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது.

அறிகுறிகள்

தலைவலி
காய்ச்சல்
தோலில் தடிப்புகள்
உடம்பு வலிகள்
இந்த அறிகுறிகள் 2-3 நாட்களுக்கு நீடிக்கலாம்
இந்த நோய் தாக்கிய ஒருவருக்கு சுமார் மூன்று மாதங்கள் களைப்பாக உணர்வர். ஆனால் பொதுவாக இதற்கு சிகிச்சை தேவைப்படாது.

டெங்கு நோய் பீடித்தால் மரணம் உறுதியா?

குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களையும் பாதிக்கும் இந்நோய், பொதுவாக மரணத்தை ஏற்படுத்துவதில்லை.
ஆனால் டி.எச்.எஃப் என்ற ஒரு வகை ஜுரம் உயிராபத்தை தோற்றுவிப்பதாக இருக்கலாம்..

செய்ய வேண்டியவை

கொசுக்கடியிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்
பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்
அதிகப்படியான ஓய்வு எடுக்க வேண்டும்
இதற்கு தடுப்பு மருந்து கிடையாது
ஆனால் ஒரு முறை டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு பொதுவாக அதே ஆண்டு மீண்டும் அந்நோய் வராது.

டெங்கு பாதித்தவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்!

இனிப்பு சுவையுள்ள உணவுகளைக் குறைத்து, பாகற்காய் உள்ளிட்ட கசப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்க்கவேண்டும். காரம் அதிகமாகச் சாப்பிட விரும்புபவர்கள் மிளகாய்க்குப் பதிலாக மிளகைச் சேர்த்துக் கொள்ளலாம். அரிசி அல்லது தானியத்தில் செய்த கஞ்சியை இரண்டு வேளை கொடுக்கவேண்டும். தினசரி 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். மேலும், பழச்சாறுகள், இளநீர், சீரகத் தண்ணீர் போன்றவற்றையும் அவ்வப்போது குடிக்கலாம்.

அன்னாசிப் பூ சேர்த்துத் தயாரித்த தேநீர், லவங்கப்பட்டை சேர்த்த டீ, திரிகடுகம் காபி ஆகியவற்றையும் குடிக்கலாம். கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும். அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய்யில் பொரித்த உணவுகளையும் தவிக்க வேண்டும்.