42 புகையிரத சேவைகள் குறித்து தற்போது வெளியான அறிவிப்பு

நாளை (12) முதல் 42 ரயில் பயணங்களை ரத்து செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் மீளப்பெறப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

விசேட அறிக்கையொன்றை விடுத்து திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

ரயில்களை இயக்க போதிய ஊழியர்கள் இல்லாததால் நாளை முதல் மறு அறிவித்தல் வரை 42 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது.

Previous articleடெங்கு நோயில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்
Next articleவவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது