யாழில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான அரசுப்பேருந்து !

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்து வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நேற்று (13.01.2023) யாழ்ப்பாணம் பருத்திதுறையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வாகன திருத்தும் நிலையத்திற்குள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பஸ், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் மீது மோதியது.

இதனால், வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது, ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

Previous articleபிரான்சிலிருந்து வந்து இலங்கையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சுற்றுலா பயணி !
Next articleஇந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் செல்வமும் சந்தோஷமும் பொங்கி வழியும்!