யாழில் வெற்றிலை சப்பியபடி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

யாழில் இன்றைய தினம் (17.01.2023) வெற்றிலை சப்பியபடி பொலிஸ் நிலைய நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸ் நிலைய வாயிலில் வெற்றிலை சப்பியபடி நின்றது மட்டுமல்லாமல் அங்கு வருபவர்களிடம் அடாவடியாகவும் நடந்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டமைக்கு அமைய குறித்த பொலிஸ் அதிகாரியை கடமையில் இருந்து அகற்றி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலைய நிர்வாக அதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளமை தெரிய வருகின்றது!