யாழில் நிறைவெறியில் பேருந்து பயணிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட காவாலிகள்!

நேற்றைய தினம் யாழிலிருந்து சாவகச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் நிறை வெறியில் ஏறிய மூன்று காவாலிகள் பேருந்தில் பல பயணிகள் அமர்ந்திருந்த வேளையிலும் தைரியமாக பேருந்தில் உள்ள பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர்.

இதனால் பேருந்தில் உள்ளவர்கள் அச்சம் கொண்டு கத்தியுள்ளனர் இதனால் பேருந்தின் சாரதியும் நடத்துனரும் பேருந்தை நிறுத்தி காவலிகளை பேருந்தை விட்டு இறக்க முற்ப்பட்ட வேளை சாரதியையும் நடத்துனரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அச்சமடைந்து தப்பி ஓடிய இருவரும் யாழ் வளைவு அருகில் நின்று கொண்டிருந்த இராணுவத்திடம் இது குறித்து கூற பொலிசாரிடம் கூறவும் என கூறியுள்ளனர்.

அதேவேளை வீதியால் சென்று கொண்டிருந்த வாகனங்களையும் மறித்து அடாவடி செய்துள்ளனர்

தக்க தருணத்தில் வீதியால் கிரிக்கெட் விளையாடி விட்டு வந்த இளைஞர்கள் சிலர் இவர்களின் அடாவடித்தனத்தை பார்த்து கொந்தளித்து பொது மக்களுடன் சேர்ந்து காவாலிகளுக்கு கும்பிடக் கும்பிட தர்ம அடி கொடுத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்

Previous articleமட்டக்களப்பில் பெண் கடத்தல்? – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!
Next article2021ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!