யாழில் எலி கடித்த உணவுப் பொருள் விற்பனை!

யாழில் எலி கடித்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த புதன்கிழமை மட்டுவில் சரசாலை பிரதேசத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பலசரக்குக் கடைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டனர்.

இதேவேளை, மட்டுவில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எலி கடித்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

உணவக உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5 வர்த்தக நிலையங்களில் காணப்பட்ட காலாவதியான பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

Previous articleயாழில் ஆசிரியையின் தங்கச் சங்கிலியை கொள்ளை அடித்துச் சென்ற நபர் கைது !
Next articleஇன்று முதல் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!