யாழில் பலரையும் ஆச்சர்யத்திற்கு உட்படுத்திய வெளிநாட்டு பெண்மணி ! அப்படி என்ன செய்தார் தெரியுமா !

யாழ்ப்பாணத்தில் விவசாயம் செய்து வரும் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.


இந்நிலையில், இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹோர்பாக் நேற்று யாழ்ப்பாணம் எஸ்கே பண்ணைக்கு விஜயம் செய்தார்.

அலியாவெல உலந்தைக்காடு இயற்கை விவசாயத்தை நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பண்ணைக்கு வருகை தந்த நெதர்லாந்து தூதர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தென்னை, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பயிர்ச் செய்கைகளில் பெருமை அடைவதாகவும் அவர் கூறினார்.

யுத்தத்தின் பின்னர் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்ததோடு, மக்களின் வாழ்க்கை நிலை குறித்தும் அறிந்து கொண்டார்.

மேலும், இந்த விவசாய பண்ணை உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதே சமயம் யாழ்ப்பாணம் மண்ணும் நீரும் நிறைந்த நிலம், அரசு வேலையில் உள்ள பலர் இன்னும் விவசாயம் செய்து வருகின்றனர்.

பெரிய பதவியில் இருந்தும் பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து தங்களுக்கு உணவளித்து வந்த விவசாயத்தை அவர்கள் இன்னும் கைவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்தில் குண்டுத் தாக்குதல் கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது!
Next articleமருத்துவர் பிரியந்தினி தொடர்பில் வெளியான சர்சைக்குரிய தகவல்!