யாழில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து ! ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இரு இளைஞர்கள் !

யாழில் கேகேஎஸ் வீதி தாவடி சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த ஓட்டுமடத்தை சேர்ந்த இரு இளைஞர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து கே.கே.எஸ் நோக்கிப் பயணித்த தென்னிலங்கையைச் சேர்ந்த வான் மீது நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

இந்த விபத்தில் இரு இளைஞர்களும் எதிர்திசையில் வெகுதூரம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தில் மோட்டார் வாகனமும் வேனும் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்பட்டன.

சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous article75 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு இலங்கைக்கு இந்தியா கொடுத்த பரிசு!
Next articleஇன்றைய ராசிபலன் 06.02.2023