யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் !

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஹைஸ் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், யாழ்ப்பாணம், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த அனுஜன் (வயது 19) என்ற இளைஞரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஜெயசீலன் ரகுசன் (வயது 17) என்ற இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்…..!

Previous articleஇன்றைய ராசிபலன் 06.02.2023
Next articleயாழில் போதைப் பொருளுடன் சிக்கிய மன்னர் வியாபாரி !