பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் மாயம் ! யாழில் கதறும் குடும்பத்தினர் !

பிரான்ஸ் – பாரிஸ் பிராந்தியத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் வலயத்தின் 7ஆம் இலக்க மெட்ரோவில் உள்ள வில்லுப் பகுதியில் வசித்து வந்த 41 வயதுடைய சிவசுப்ரமணியம் சபேசன் என்பவர் கடந்த 20 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் யாழ்ப்பாணம் மல்லாகத்தில் வசித்து வரும் நிலையில், தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு மனைவி பிரான்ஸ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த நபர் வதிவிட விசா கிடைக்காத நிலையில் பல தமிழ் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காணாமற்போனவர் தாம் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருடன் வாய்த்தகராறு ஏற்பட்டு இறுதியில் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், குடும்பஸ்தர் குறித்த தகவல் எதுவும் கிடைக்காததால் யாழில் உள்ள மனைவி மற்றும் உறவினர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleயாழில் சிவராத்திரி தினமான இன்று வீதியில் வீசப்பட்ட மாமிச கழிவுகள்
Next articleஇலங்கையில் முதன் முறையாக குப்பையில் இருந்து மின்சார உற்பத்தி!