முல்லைத்தீவில் மாடுக்ளை திருட முயன்ற சிங்களவர்கள்! ; தடுக்க முயன்ற நபருக்கு நேர்ந்த கதி!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய், சிவந்தாமுறிப்பு பகுதியில் கால்நடைகளை வளர்த்த தமிழ் தொழிலாளி ஒருவரை சிங்களவர்கள் சிலர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மாடு வளர்ப்பவரின் கால்நடைகளை சிங்களவர்கள் திருட முற்பட்ட போது அவர்களால் கட்டிவைத்து தாக்கப்பட்டதாகவும் கால்நடை வளர்ப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் பகுதியில் வசிக்கும் சிவக்கொழுந்து கந்தசாமி என்ற கால்நடை வளர்ப்பாளர் சிங்களவர்களால் தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தநிலையில் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று நிலைமைகளை கேட்டறிந்தார்.

மறுபுறம் கொக்குத்தொடுவாய் பிரதேச தமிழ் மக்களின் கால்நடைகளை வெலிஓயா பகுதியை சேர்ந்த சிங்களவர்கள் திருடி வருவதாக அப்பகுதி தமிழ் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

திருட்டைத் தடுக்கச் செல்லும் தமிழர்கள் மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கொக்குத்தொடுவாய் பிரதேச மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் முறையிட்டுள்ளனர். மேலும் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதே கொக்கு தொடுவாய் தமிழ் மக்களின் கோரிக்கையாகும்.