இலங்கையருக்கு அமெரிக்கா வழங்கிய அங்கீகாரம்

இலங்கையை சேர்ந்த பேராசிரியர் ஒருவருக்கு அமெரிக்கா அங்கீகாரம் வழங்கியுள்ளது பேராசிரியர் எண்டனி எங்கிக்கு (Anthony Anghie) என்பவருக்கே அமெரிக்க சர்வதேச சட்ட சங்கம் கௌரவ விருது ஒன்றினை வழங்கி கெளரவித்துள்ளது.

சர்வதேச சட்டத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக அவருக்கு Manley-O.-Hudson பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது எனக்கு எதிர்பாராத கௌரவம் என பேராசிரியர் எண்டனி எங்கி (Anthony Anghie ) குறிப்பிட்டுள்ளார் அத்தோடு அவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்