யாழில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் கைது!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் நேற்றைய (27-02-2023) தினம் ஊர்காவற்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து மேலும் தெரிய வருகையில் மூளாய் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்  ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு பகுதியில் தலைமறைவாகி இருந்தவேளை அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவிற்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்படும் வேளை அவரிடம் இருந்து காஸ் சிலிண்டர், உலர் உணவுப் பொருட்கள், தராசு போன்ற பொருட்கள் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.சந்தேக நபரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Previous articleஇன்றைய ராசிபலன்28.02.2023
Next articleயாழில் சோகத்தை ஏற்ப்படுத்திய இளம் தாயின் மரணம்