யாழில் சற்றுமுன் திடீரென பற்றி எரிந்த புடவை கடை! பல லட்சம் பெறுமதியான புடவைகள் நாசம் !

யாழ். வடமராட்சி நெல்லியடி பகுதியில் புடவைக்கடை ஒன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (27.02.2023) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சேலைக்கடையில் திடீரென தீப்பிடித்ததில் பல இலட்சம் ரூபா பெறுமதியான சேலைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

தீயை அணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர நீண்ட நேரம் எடுத்ததால் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

இது தொடர்பாக நெல்லியடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleபிரான்சில் காணமல் போயுள்ளதாக கூறப்பட்ட யாழ் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
Next articleசிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க அச்சத்தில் உள்ளார் – இரா.சாணக்கியன் !