யாழ்தேவி புகையிரத சேவை தொடர்பில் வெளியான தகவல் !

மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் இடைநிறுத்தப்பட்டிருந்த வடக்கு புகையிரத சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த யாதேவி ரயிலின் பெட்டியொன்று நேற்று பிற்பகல் தடம் புரண்டது.

இதன் காரணமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை தாமதமாகியதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தடம் புரண்ட புகையிரதத்தின் முன்பக்கப் பெட்டிகளுக்கு பயணிகள் மாற்றப்பட்டு கொழும்பு கோட்டை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள நிகவெரட்டிய மற்றும் மொரகொல்லாகமவிற்கு இடையிலான வீதியும் தடைப்பட்டுள்ளது.

Previous articleபாடசாலை மாணவர்களுக்கான சீறுடை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
Next articleஇன்றைய ராசிபலன்06.03.2023