யாழில் மேல்மாடியில் இருந்து வீசப்பட்ட மூன்று மாத குழந்தை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசுவின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே சிசு வீசப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக சிசுவின் சடலம் கீழே விழுந்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் கருத்தரித்த ஒருவர் இதனை பிரசவித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு மூன்று மாத வளர்ச்சிக் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Previous articleதிடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவன் உயிரிழப்பு!
Next articleஇலங்கைக்கு வர இருக்கும் தொழில் நிறுவனங்கள்