யாழில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டச் வீதி ஐங்கரன் மண்டபத்திற்கு பின்பாக உள்ள கண்டுவில் குளத்திற்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை 8.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தூக்கில் சடலாமாக கண்டுபிடிக்கப்பட்டவர் சாவகச்சேரியைச் சேர்ந்த கு.மயூரன் வயது 23 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னரும் கிணற்றில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் மனைவியை அநாகரிகமாக படம் பிடித்தவரை தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த பரிதாபம் !
Next articleயாழில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 27 வயதான நபர் !