கனேடிய நாணயதாளில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

கனடாவின் 20 டொலர் நாணயத் தாளில் மன்னார் சார்ள்ஸின் உருவப்படத்தை பொறிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மன்னரின் முடிசூட்டு விழாவின் போது மத்திய அரசாங்கம் இது குறித்து அறிவித்துள்ளது.

20 டொலர் நாணயத்தாளிலும், நாணயக் குற்றிகளிலும் மன்னரின் உருவப்படத்தை பொறிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என சமஷ்டி அரசாங்கம் அறிவித்துள்ளது.

அடுத்த நாணயதாள் வடிவமைப்பு நடவடிக்கைகளின் போது மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் உருவப்படம் பொறிக்கப்பட்டது போன்று மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் உருவப்படம் பொறிக்கப்படும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடிய தபால் திணைக்களம் ஏற்கனவே மன்னரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரை புழக்கத்தில் விடப்பட்டது.

நாணயத்தாள் வெளியீடு விவகாரத்தில் மக்கள் மத்தியில் மாற்றுக் கருத்து நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், பிரித்தானிய முடியாட்சியின் கீழான அவுஸ்திரேலியா தனது நாணயத்தாள்களில் மன்னரின் உருவப்படத்திற்கு பதிலாக பழங்குடியின கலாசாரத்தை பிரதிபலிக்க தீர்மானித்துள்ளது.