சூடானில் இடம்பெறும் யுத்த மோதல்கள் காரணமாக 07 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு!

சூடானில் இடம்பெற்றுவரும் யுத்த மோதல்கள் காரணமாக 07 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உணவுப் பற்றாக்குறை மற்றும் சுகாதார வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சூடான் இராணுவ இடையிலான மோதல்கள்

கடந்த ஏப்ரல் 15 முதல், சூடான் இராணுவத்திற்கும், துணை இராணுவ விரைவு ஆதரவுப் படையினருக்கும் (RSF)  இடையிலான மோதல்களின்  போது  500க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.